*************சற்குருசபா**********************
......................................நலம் நலமாக நலம் நாடுவோம்
திங்கள், 14 நவம்பர், 2011
தியானத்தின் முதல் படி -
ஏற்கனவே எனக்கு நல்லா தெரிஞ்ச விஷயம்தானேன்னு சொல்றவங்க, மேலே படிங்க...
தியானம் என்கிற சொல்லில் இப்ப எல்லாருக்குமே ஒரு மயக்கம் இருக்கு :) தியானம் பண்ண பழகிக்கணும் அப்படின்னு எல்லாருமே நினைக்கிறோம். தியானம் பண்றது பற்றியும், அதனோட பலன்கள் பற்றியும், படிக்கவும் கத்துக்கவும், நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஆனாலும் எத்தனை பேரால அதை தொடர்ந்து செய்ய முடியுது என்பது கேள்விக் குறிதான். ஏன்னா, தியானம் என்பது தினசரி பயிற்சியினாலும், விடா முயற்சியினாலும்தான் கை கூடும். நம்மில் எத்தனை பேரால அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட முடியுது?
முதல் பழி நேரத்தின் மேலதான். எனக்கு நேரமே இல்லை; எவ்வளவு வேலைகள் வரிசையா இருக்கு? இதில் உட்கார்ந்து தியானம்னு தனியா செய்ய எனக்கு எங்கே நேரம் இருக்கு? அப்படிங்கிறதுதான் முதல் காரணம்.
“ஒருவருக்கு ஒரு செயலைச் செய்யும் விருப்பம் இருந்தால், அவர் அதைச் செய்து விடுவார். இல்லையென்றால் அவரின் அந்த விருப்பம் உண்மையானதல்ல என்று பொருள்”, அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன். ‘When there is a will, there is a way’.
நமக்கு எது ரொம்ப முக்கியமோ, எது ரொம்ப பிடிக்குமோ, அதை எப்படியும் செய்திடறோம். ஆனா மற்ற வேலைகளை எப்படியும் தள்ளி போட்டுடறோம். அதே போலதான் இதுவும்.
சரி... நமக்கு உண்மையிலேயே விருப்பம்தான், அதனால எப்படியோ இதுக்கு நேரம் கண்டு பிடிச்சிடறோம்னு வைங்க. அடுத்த தடைக்கல் என்ன?
நம்மோட பொறுமை(யின்மை).
இந்த அவசர உலகத்தில், நமக்கு எல்லாமே உடனே உடனே கிடைக்கணும். எதுக்குமே காத்திருக்கக் கூடிய பொறுமை யாருக்குமே இல்லை. (எனக்கும்தான் :)).
டிகாக்ஷன் போட யாருக்கு நேரம் இருக்கு? உடனடி காஃபி பவுடர் வந்த பிறகு நமக்கு அது எதுக்கு? நேரம் இல்லையா, திடீர் ரசப் பொடியை எடு. கரைச்சு விட்டு கொதிக்க வை. தலைக்கு குளிக்கணுமா? எண்ணெய் தேச்சு... சீயக்காய் போட்டு... எவ்ளோ வேலை! ஷாம்பூவைப் போட்டு குளி. சமைக்க நேரம் இல்லையா? உணவு விடுதிக்கு போய் சாப்பிடு. அதுவும் சாதாரண உணவு விடுதி கூட இல்லை, ‘விரைவு’ உணவு விடுதி. திடீர் விருந்தாளியா, கடைக்கு போய் தோசை மாவு, திடீர் சாம்பார் பொடி, இனிப்பு, இப்படி ஏதாவது வாங்கிடு. (இப்பல்லாம் திடீர் விருந்தாளியா போக முடியாதுங்கிறது வேற விஷயம் :). தொலைபேசி, சொல்லிட்டுதான் போகணும்!)
இந்த மாதிரியேதான், தியானம் பண்ண ஆரம்பிச்ச பிறகு, அதனோட பலனையும் instant-ஆ, உடனடியா எதிர்பார்க்கிறோம். ஆனா அது அவ்வளவு சுலபமில்லைன்னு தெரியும் போது, மனம் தளர்ந்து, முயற்சி செய்யறதையே விட்டுடறோம்.
தனியா இதுக்குன்னு உட்காரமலேயே எப்படி தியானத்தை விரும்ப கத்துக்கலாம்? விருப்பம் வந்திடுச்சுன்னா, மற்றதெல்லாம் பின்னாடியே வந்துடும். அதுக்கு, நம்ம மனசை ‘ருசி கண்ட பூனை’யாக்கணும் :)
அதுக்கு முன்னாடி, தியானம்னா என்ன, அதை எதற்காக பண்ணனும்னு நினைக்கிறோம், என்பதை பார்க்கலாம்...
(நான் expert-லாம் இல்லை. புரிஞ்சதை பகிர்ந்துக்கறேன். தவறு இருந்தால் தெரிஞ்சவங்க திருத்தணும்னு கேட்டுக்கறேன்.)
பொதுவாக சொல்லணும்னா, தியானம் என்பது எண்ணங்களை ஒருமுகப்படுத்தறதுதான். அதற்கு பலனா நாம எதிர்பார்க்கிறது (பெரும்பாலும்) மன அமைதிதான்.
எண்ணங்களை ஒருமுகப் படுத்துவது அப்படின்னு சொல்லும்போதே, ஒரு விஷயம் தெளிவாகுது. அதாவது, நம்மோட எண்ணங்களை நாமளே நல்லா புரிஞ்சுக்க வேண்டியது அவசியமாகுது. அது என்ன பெரிய விஷயம்கிறீங்களா? நிச்சயமா பெரிய விஷயம்தாங்க! ஒரு சில நிமிஷங்கள் உங்க எண்ணங்களை கவனிச்சு பார்த்தாலே எத்தனை பெரிய விஷயம்னு தெரிஞ்சிடும்.
மனம் என்பது குரங்குன்னு சரியாதான் சொல்லி வச்சிருக்காங்க. ஒரு விஷயத்தை நினைச்சுக்கிட்டே இருப்போம், திடீர்னு சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயத்துக்கு தாவிடும், மனசு. இதுக்கு முன்னாடி என்ன நினைச்சுக்கிட்டிருந்தோம், அப்படின்னே கூட சில சமயம் மறந்து போயிடும்!
மனம் என்பதோட வேலையே எண்ணங்களை உற்பத்தி செய்யறதுதான். ஒரு நாளைக்கு, தோராயமா 40000 முதல் 50000 எண்ணங்கள் நமக்குள்ள ஓடுதாம். நினைச்சு பார்த்தா பிரமிப்பா இருக்குல்ல?
அவ்வளவு எண்ணங்களையும் எப்படி ஒருமுகப் படுத்தறது? அதுக்குத்தான் நாம எண்ணங்களை நாமே புரிஞ்சுக்கணும்.
இத்தனை ஆயிரம் எண்ணங்களில், நமக்கு positive energy கொடுக்கிற எண்ணங்கள் ரொம்ப குறைவுதானாம். முக்கால்வாசி எண்ணங்கள் உபயோகமில்லாத எண்ணங்கள்தானாம். அதாவது, கடந்த காலத்தை பற்றிய கவலை, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம், இப்படித்தான் பெரும்பாலான எண்ணங்கள் இருக்குமாம்.
இப்படிப்பட்ட negative energy-யினால என்ன ஆகுது? இன்னும் கொஞ்சம் நமக்கு உற்சாகம் குறைவதும், கவலை அதிகமாவதும்தான் மிச்சம். அதனாலதான் ஆன்மீகத்தில், கண்டதையும் நினைச்சுக்கிட்டிருக்காம, முடிஞ்ச வரை இறைவனின் நாமத்தை நினைக்கச் சொல்றாங்க.
இந்த பயனில்லாத எண்ணங்களோட கூட, அடுத்து என்ன வேலை இருக்கு, அடுத்த வாரம் என்ன செய்யணும், அப்படின்னு திட்டமிடுகிற எண்ணங்களும் இருக்கும். நிகழ்காலத்தை பற்றி, இந்த நிமிஷத்தைப் பற்றிய சிந்தனை அபூர்வமாதான் இருக்குமாம்.
யோசிச்சு பார்க்கும்போது அது உண்மைன்னே தெரியுது... தினசரி வேலைகள் செய்யும் போதெல்லாம் பழக்கத்தினால நாம அவற்றை இயந்திரத்தனமா செய்யறோமே தவிர, நம்ம கவனமெல்லாம், நினைவெல்லாம், வேற எங்கேயோதானே இருக்கு? பாதி நேரம் சாவிக் கொத்தை எங்கே வச்சோம், பணத்தை எங்கே வச்சோம், இப்படி முக்கிய விஷயங்களில் கூட கவனமில்லாம, அவற்றை எங்கேயோ வச்சுட்டு, வேற எங்கேயோ தேடிக்கிட்டிருப்போம்.
சில சமயம் ஸ்லோகங்கள் சொல்லும்போதே கவனமில்லாம சொல்லி நிறைய வரிகளை விட்டுட்டு, வேற எங்கேயோ போயிடுவேன் :( சமயத்தில் ஒரு பாட்டில் ஆரம்பிச்சு வேற ஒரு பாட்டில் கூட போய் முடியும்! :( திடீர்னு அடடா, என்ன பண்றோம், அப்படின்னு திட்டிக்கிட்டு, மறுபடியும் ஆரம்பிப்பேன்.
அதனால, தியானம் செய்ய முயற்சிக்கிறதுக்கு முன்னாடி, முதல்ல செய்ய வேண்டியது – வேடிக்கை பார்க்க கத்துக்கறதுதான்! அதாவது நம்ம எண்ணங்களை நாமே மூணாம் மனுஷன் மாதிரி தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கறது.
ஒவ்வொரு நிமிஷமும் நாம என்னதான் நினைக்கிறோம், அப்படின்னு அப்பதான் நமக்கே தெரியும். நம்ம கவனமெல்லாம் நம்முடைய எண்ணங்கள் மேல இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில்... இதோ வேண்டாத கிளையில் ஏறப் போகுது மனசு, அப்படின்னு உணர ஆரம்பிக்கும் போதே, அதை திசை திருப்பி விடறது சுலபம்!
முதலில் சில நிமிஷங்கள் மட்டும் வேடிக்கை பார்க்கலாம்; பிறகு நாள் முழுவதுமே வேடிக்கை பார்க்கிறது கைவந்த கலையாயிடும். வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும் இந்தக் கலை நமக்கு கை கொடுக்கும்! நிகழ்காலத்தை அனுபவிச்சு வாழ்வதற்கும், பழங்காலத்தை, துன்பங்களை மறப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பயத்தை குறைப்பதற்கும், இப்படி.... இதனால பதட்டங்கள் குறைஞ்சு, மனசில் அமைதியும் அதிகமாகிக்கிட்டே வரும்...
பிறகு எண்ணங்களை ஒருமுகப்படுத்தறது என்பது ரொம்பவே சுலபமாயிடும்.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க. (ஏன்னா நான் இன்னும் செய்து பார்க்கலை! ஹி... ஹி...)
எல்லோரும் நல்லா இருக்கணும்!
அன்புடன்
கவிநயா
வியாழன், 1 செப்டம்பர், 2011
ஓட்ஸ் உணவுப்பொருளா? மருந்துப்பொருளா?
விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்
ஸ்ரீ விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந் தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.
ஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜா விதானம்
September 8, 2010 அன்னிக்கு எழுதியது இங்கே. இந்த வருஷம் இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதலாம்னு, பூஜா விதானங்கள்-சேர்த்துக் கொண்டாயிற்று. கொழுக்கட்டை, பாயசம் செய்முறை vidhya's kitchen-blog-page-கில் இருக்கிறது. ================================================================
பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்
முன்பே தயார் செய்து கொள்ள வேண்டியவை
குறைந்தது பன்னிரண்டு முதல் இருபத்தொரு எண்ணிக்கையில்
பூரண கொழக்கட்டை
உளுத்தம் கொழக்கட்டை
எள்ளு கொழக்கட்டை
பிடி கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
அம்முனி உருண்டை கொழுக்கட்டை
ஆம வடை
வெல்ல பாயசம்
ஒரு ஸ்பூன் பருப்பு, நெய் சேர்த்த அன்னம் (மகா நெய்வேத்தியம்)
அப்பம்
சுண்டல்
சர்க்கரை பொங்கல்
தயிர்
பசும்பால்
நெய்
தேன்
கற்கண்டு
அவல், பொரி மஞ்சள்
கும்குமம்
சந்தனம்
அக்ஷதை
வெற்றிலை
பாக்கு
மாவிலை, தோரணம்
உதிரிப்பூ - கொஞ்சம்
பூமாலை - 2
தொடுத்த சரம் - 3 முழம்
ஊதுவத்தி
சாம்பிராணி
அட்சதை
கற்பூரம்
வெள்ளை வேஷ்டி துணி
பூணூல்
முழு பாக்கு
மஞ்சள் கிழங்கு
தாம்பாளம்
பஞ்சபாத்திரம் உத்தரணி
பூஜை மணி
கற்பூரத் தட்டு
தூபக்கால்
தீபக்கால்
பித்தளை கிண்ணங்கள்
பித்தளை தட்டுக்கள்
ஆரத்தி தட்டு
பலகை
வெள்ளி காசுகள்
வாழைப்பழம் - 12
தேங்காய் - 6
விளாம்பழம், நாவல்பழம் ஆகிய பழங்கள்.
மேலும் வசதிக்கு ஏற்றபடி சில பழங்கள்
விளாம்பழத்தை பெரும்பாலும் யாரும் பயன்படுத்தாமல் அப்படியே தூக்கி போடுகின்றனர். பூஜை ஆனதும் சிலர் வெல்லம் கலந்து சாப்பிடுவார்கள். அப்படி தித்திப்பு பிடிக்காமல் இருந்தால், பழத்தை உடைத்து உள்ளிருக்கும் சதைப் பகுதியை அப்படியே தயிரில் போட்டு, தாளித்து உப்பு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
================================================================
பூர்வாங்க பூஜை
பூஜாரம்பம்
ஆசமநம்
(கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லிக் குட்டிக் கொள்ளவும்)
கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வ விக்நோபசாந்தையே
ஸுமுகசைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ
ஷோடசைதானி நாமானி ய: பதே ச்ருனுயா தபி
வித்யாரம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா
சஜ்க்ராமே சர்வ கார்யேஷு விக்னஸ்தஸ்ய நஜாயதே
அபீப்ஸிதார்தா சித்த்யர்தம் பூஜிதோ யஸ்சு ரைரபி சர்வ விக்னச்சிதே
தஸ்மைகனாதிபதயே நம:
அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோஸ்விதி பவந்தோ
மஹாந்தோநு க்ருஹ்ணந்து
என்று சொல்லி பெரியோர்களைக் குறித்து பிரார்த்தித்துக் கொள்ளவும்.
அயம் முஹூர்த்தஸ் ஸுமுஹூர்த்தோஸ்து என்று பெரியவர்கள் ப்ரதிவசனம் சொல்லவும். (மூத்தவர்கள் இருந்தால்)
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம் ததேவலக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்திரபலம் ததேவ
வித்யாபலம் தெய்வபலம் ததேவ
லக்ஷ்மீ பதே தே அங்க்ரியுகம் ஸ்மராமி
ப்ராணாயாமம்
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் - ஸத்யம்-ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தியோ யோ-ந: ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம-பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம்
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முகூர்த்தே(அ)த்ய ப்ரம்மன த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, பரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பாரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி சம்வத்சரானாம், மத்யே கர (2011) (வருஷம் பெயர்) நாம சம்வத்சரே, தக்ஷிணாயனே, வர்ஷ ரிதௌ (மாசம்) பாத்ரபத (ஆவணி) மாசே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுபதிதௌ குரு வாசர யுக்தாயாம் ஹஸ்த நக்ஷத்திர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ, (உங்கள் கோத்ரம்) கோத்ர: ஸ்ரீமான் (உங்கள் பெயர்), நாமதேயஸ்ய, தர்மபத்னீ சமேதஸ்ய அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐஸ்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், தர்மாத்மா காம மோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த சித்த்யர்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், சமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம், சிந்தித மனோரத அப்த்யர்தம், மனோ வாஞ்சிதசகல அபீஷ்ட ஃபல சித்த்யார்தம், வர்ஷே ப்ரயுக்த வரசித்தி விநாயக சதுர்தீ முத்திஷ்ய ஸ்ரீ வரசித்தி விநாயக தேவதா ப்ரீத்யர்த்தம், ப்ரஸாத ஸித்த்யர்த்தம், கல்பக்தப்ரகாரேன யாவச்சக்தி த்யான-ஆவாஹனாதி சமஸ்த ஷோடச உபசாரை: ஸ்ரீ சித்திவிநாயக பூஜாம் கரிஷ்யே.
ஆஸன பூஜை
ப்ருதிவ்யா: மேருப்ரு ட்டருஷி: -ஸுதலம் ச்சந்த: கூர்மோ தேவதா
ப்ருத்வி த்வயா த்ருதா லோகா தேவி த்வம் விஷ்ணுநா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு சாஸனம்
கண்டா பூஜை
(மணி அடிக்கவும்)
ஆகமார்த்தம்து தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்
த்யானம் மற்றும் ஆவாஹனம்
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:
விக்னேஸ்வர பூஜை (மஞ்சள் பிள்ளையார்)
மஞ்சள் பிள்ளையார் கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து சந்தன குங்கும அக்ஷதைகள் சேர்த்து ஒரு சின்ன பித்தளை தட்டில் வைத்துக் கொள்ளவும். பஞ்சுத் திரி நெய் கொண்டு ஐந்து முக விளக்கொன்றை ஏற்றி;
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோ (உ)ப சாந்தயே
என்று ஜபித்து, வலது தொடை மீது வலது கை வைத்து இடது கையால் வலது கையை மூடிக்கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளவும்.
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம் ததேவலக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்திரபலம் ததேவ
வித்யாபலம் தெய்வபலம் ததேவ
த்யானம்
கணானாம் த்வாம் கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்ஹணாம் பிரம்மணஸ்பத ஆனஹ
ஸ்ருன்வன்னோதிப்ஹிஸ்சீத சாதனம்
அஸ்மின் ஹரித்ரா பிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
இஷ்டதெய்வத்தை மனதில் த்யானித்துக் கொண்டு, பூ அக்ஷதை சமர்ப்பணம் செய்து, மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜிக்கவும்.
ஆவாஹனம்
அஸ்மின் பிம்பே ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசனம் சமர்ப்பயாமி (பூ போடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்க்யம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: மதுபர்க்கம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: வஸ்த்ரம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: உபவீதம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆபரணம் சமர்ப்பயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: புஷ்பை பூஜயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)
தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. (வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்யவும்)
புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்.
- ஓம் சுமுகாய நம:
- ஓம் ஏகதந்தாய நம:
- ஓம் கபிலாய நம:
- ஓம் கஜகர்ணகாய நம:
- ஓம் லம்போதராய நம:
- ஓம் விகடாய நம:
- ஓம் விக்னராஜாய நம:
- ஓம் விநாயகாய நம:
- ஓம் கணாதிபாய நம:
- ஓம் தூமகேதவே நம:
- ஓம் கணாத்யக்ஷாய நம:
- ஓம் பாலச்சந்த்ராய நம:
- ஓம் கஜானனாய நம:
- ஓம் வக்ரதுண்டாய நம:
- ஓம் சூர்பகர்னாய நம:
- ஓம் ஹேரம்பாய நம:
- ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
- ஓம் சித்திவினாயகாய நம:
- ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:
தீபம்: நெய் ஜோதி விளக்கு காண்பித்து: தீபம் சந்தர்ஷயாமி
உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : தீபானந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி
நிவேதன மந்திரங்கள்
நைவேத்யம்: தேங்காய் பழங்கள் மீது தண்ணீர் தெளித்து:
ஓம் பூர்புவஸ்ஸுவ: ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந: ப்ரசோதயாத்
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய: ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா, ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் சமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்ம்மனே ஸ்வாஹா, நைவேத்யம் நிவேதயாமி, நைவேத்யானன்தரம் ஆசமநீயம் சமர்பயாமி.
தாம்பூலம் சமர்பித்து:
தாம்பூலம் சமர்பயாமி
கற்பூர நீராஞ்சனம்: கற்பூர நீராஞ்சனம் சமர்பயாமி
உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : கற்பூர நீராஜனனந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி
வந்தனம்: மந்த்ரபுஷ்பம் சமர்பயாமி
ஆத்ம பிரதக்ஷிணம்
(தன்னையே பிரதக்ஷிணம் செய்து கொண்டு)
யானி கானிச்ச பாபானி ஜன்மாந்தர க்ரிதானிச தானி தானி வினஸ் யந்தி
பிரதக்ஷிண பதே பதே
நமஸ்காரம் செய்து:
நமோ நமோ கணேசாய நமஸ்தே விஸ்வ ரூபிணே
நிர்விக்னம் குருமே காமம் நமாமி த்வாம் கஜானன
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்னிசம்
அநேக தந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
விநாயக வரம் தேஹி மகாத்மான் மோதகப்ரிய
அவிக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா
வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவா சர்வகார்யேஷு சர்வதா
ப்ரதக்ஷிண நமஸ்காரான் சமர்பயாமி
பிரார்த்தனை
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று
விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு
கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரசில் தரித்துக் கொள்ளவும்)
ப்ராணாயாமம்
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் - ஸத்யம்-ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தியோ யோ-ந: ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம-பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம்
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முகூர்த்தே(அ)த்ய ப்ரம்மன த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, பரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பாரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி சம்வத்சரானாம், மத்யே கர (2011) (வருஷம் பெயர்) நாம சம்வத்சரே, தக்ஷிணாயனே, வர்ஷ ரிதௌ (மாசம்) பாத்ரபத (ஆவணி) மாசே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுபதிதௌ குரு வாசர யுக்தாயாம் ஹஸ்த நக்ஷத்திர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ, (உங்கள் கோத்ரம்) கோத்ர: ஸ்ரீமான் (உங்கள் பெயர்), நாமதேயஸ்ய, தர்மபத்னீ சமேதஸ்ய அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐஸ்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், தர்மாத்மா காம மோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த சித்த்யர்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், சமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம், சிந்தித மனோரத அப்த்யர்தம், மனோ வாஞ்சிதசகல அபீஷ்ட ஃபல சித்த்யார்தம், வர்ஷே ப்ரயுக்த வரசித்தி விநாயக சதுர்தீ முத்திஷ்ய ஸ்ரீ வரசித்தி விநாயக தேவதா ப்ரீத்யர்த்தம், ப்ரஸாத ஸித்த்யர்த்தம், கல்பக்தப்ரகாரேன யாவச்சக்தி த்யான-ஆவாஹனாதி சமஸ்த ஷோடச உபசாரை: ஸ்ரீ சித்திவிநாயக பூஜாம் கரிஷ்யே.
அப உபஸ்ப்ருச்ய (உத்தரணியில் தண்ணீரை எடுத்துக் கொண்டு கைகளைத் துடைத்துக் கொள்ளவும்)
விக்னேஸ்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி (என்று கூறி மஞ்சள் பிள்ளையாரை அக்ஷதை புஷ்பம் சமர்ப்பித்து வடக்குப்பக்கமாக நகர்த்தவும்)
கலச பூஜை
கலசத்தில் தண்ணீர், ஒரு கிராம்பு, இரு துளசி தளங்கள், ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம், ஒரு உத்திரணி அளவு பன்னீர், வெட்டிவேர் ஆகியவற்றைச் சேர்த்து புஷ்பங்களால் அலங்காரம் செய்து வலது கையால் மூடிக்கொள்ளவும்.
கலஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர சமாஸ்ரிதா:
மூலே தாத்ரா ஸ்திதோ பிரம்மா மத்யே மாத்ருகனாஸ்ம்ருத
குக்ஷௌ து சாகரா: சர்வே சப்தத்வீபா வசுந்தரா
ருக்வேதோ(அ)தா யஜுர்வேத: சாமவேதோ(அ)யதார்வன:
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் சந்நிதிம் குரு
(என்று தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)
பூஜாத்ரவ்யங்களுக்கும் பூஜை செய்கின்றவரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.
அங்கைச்ச சஹிதா: சர்வே கலசாம்பு சமாஸ்ரிதா:
ஆயாந்து தேவ பூஜார்தம் துரிதக்ஷய காரகா:
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.
கங்காயை நம:
யமுனாயை நம:
கோதாவர்யை நம:
ஸரஸ்வத்யை நம:
நர்மதாயை நம:
ஸிந்தவே நம:
காவேர்யை நம:
தாம்ரவர்ண்யை நம:
- என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
சங்க பூஜை
கலச தீர்த்தத்தால் சங்கத்தை நிரப்பிக் கொண்டு,
த்வம் புரா ஸாகரோத்பந்நோ விஷ்ணுநா வித்ருத: கரே
தேவைச்ச பூஜித: ஸர்வை: பாஞ்சஜந்ய நமோஸ்து தே
(சங்கு இல்லாத பட்சத்தில் ஸ்லோகம் மட்டும் சொன்னால் போதுமானது)
பின் அந்த தீர்த்தத்தால் தன்னையும், பூஜைப் பொருட்களையும் மூன்று முறை ப்ரோக்ஷணம் செய்து , மீண்டும் சங்கத்தில் தீர்த்தம் நிரப்பி வைக்கவேண்டும்.
ஆத்ம பூஜை
தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸனாதன:
த்யஜேத் அஞ்ஞான நிர்மால்யம் ஸோஹம்பாவேந பூஜயேத்
பீட பூஜை
ஓம் ஸகலகுணாத்ம சக்தி யுக்தாய யோக பீடாத்மநே நம: ஆதாரசக்த்யை நம: மூலப்ரக்ருத்யை நம: ஆதிவராஹாய நம: ஆதி கூர்மாய நம: அனந்தாய நம: ப்ருதிவ்யை நம: ஆதித்யாதி நவக்ரஹதேவதாப்யோ நம: தச திக்பாலேப்யோ நம:
கண்டா பூஜை
(மணி அடிக்கவும்)
ஆகமார்த்தம்து தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்
குரு த்யானம்
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:
ப்ரதான பூஜை
தியான ஆவாஹனம்
கரிஷ்யே கணநாதஸ்ய வ்ரதம் ஸம்பத்கரம் சுபம்
பக்தானாமிஷ்ட வரதம் ஸர்வமங்கள காரணம்
ஏகதந்தம் சூர்ப்பகர்ணம் கஜவக்த்ரம் சதுர்புஜம்
பாசாங்குசதரம் தேவம் த்யாயேத் ஸித்திவிநாயகம்
த்யாயேத் கஜானனம் தேவம் தப்த –காஞ்சன- ஸந்நிபம்
சதுர்ப்புஜம் மஹாகாயம் ஸர்வாபரண பூஷிதம்
ஸித்திவிநாயகம் த்யாயாமி
அத்ராகச்ச ஜகத்வந்த்ய ஸுரராஜார்ச்சிதேச்வர
அநாதநாத ஸர்வஜ்ஞ கீர்வாண ஸுரபூஜித
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம்கவீநாம் உபமச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந: ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்
(மண் பிள்ளையாரை வைத்து பூஜித்தால்) அஸ்மின் ம்ருத்திகா பிம்பே
(ஸ்வாமி படம் வைத்து பூஜித்தால்) ஸித்தி விநாயகம் ஆவாஹயாமி
ப்ராணப்ரதிஷ்டை
(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூர்த்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்யவேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால், பஞ்சகவ்யத்தால் அந்தப் ப்ரதிமையை சுத்தம் செய்து, ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும், படமாக இருந்தால் ப்ராணப்ரதிஷ்டை மட்டும் செய்யலாம்)
ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய: ருக் யஜுஸ் ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா
ஆம் பீஜம் ஹ்ரீம் சக்தி: க்ரோம் கீலகம், ப்ராண ப்ரதிஷ்டாபநே விநியோக:
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம: ஹ்ரீம் கனிஷ்ட்டிகாப்யாம் நம: க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:
ஆம் ஹ்ருதயாய நம: ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட், ஆம் கவசாய ஹும், ஹ்ரீம் நேத்ர த்ரயாய சௌஷட், க்ரோம் அஸ்தாராய பட், பூர்ப்புவஸ்ஸுரோமிதி திக்பந்த:
ஆஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம், ஜ்யோக் பச்யேம ஸூர்ய முச்சரந்த மநுமதே ம்ருளா ந: ஸ்வஸ்தி
ஆவாஹிதோ பவ ஸ்த்தாபிதோ பவ ஸந்நிஹிதோ பவ ஸந்நிருத்தோ பவ அவகுண்டிதோ பவ ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ வரதோ பவ ப்ரஸீத ப்ரஸீத
ஸ்வாமின் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு
என்று பிரார்த்தித்து இரண்டு பழங்களை நிவேதனம் செய்யவும்.
த்யானம்
ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை: பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண மப்யங்குசம் பஞ்சபாணாந், பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன லஸிதா பீந வக்ஷோருஹாட்யா தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுககரீ ப்ராணசக்தி: பரா ந:
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம், க்ரோம் ஹ்ரீம் ஆம், அம் யம் ரம் லம் வம் சம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம் அ: ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ:
அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது, அஸ்யாம் மூர்த்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங் மனஸ் த்வக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா
(புஷ்பம் அக்ஷதை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்)
ஆஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புன: ப்ராணமிஹ நோ தேஹி போகம் ஜ்யோக் பச்யேம ஸூர்ய முச்சரந்த மனுமதே ம்ருளயா ந ஸ்வஸ்தி
ஆவாஹிதோ பவ ஸ்த்தாபிதோ பவ ஸந்நிஹிதோ பவ ஸந்நிருத்தோ பவ அவகுண்டிதோ பவ ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ வரதோ பவ ப்ரஸீத ப்ரஸீத
ஸ்வாமின் ஜகன்நாத யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன பிம்பேஸ்மின் ஸன்னிதிம் குரு
என்று பிரார்த்தித்து இரண்டு பழங்களை நிவேதனம் செய்யவும்.
ஷோடசோபசாரங்கள்
அனேகரத்ன – கசிதம் முக்தாமணி விபூஷிதம்
ரத்ன ஸிம்ஹாஸனம் சாரு கணேச ப்ரதிக்ருஹ்யதாம்
ஸித்திவிநாயகாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
கௌரீபுத்ர நமஸ்தேளஸ்து தூர்வா பத்மாதி ஸம்யுதம்
பக்த்யா பாத்யம் மயா தத்தம் க்ருஹாண த்விரதாநந
ஸித்தி விநாயகாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
ஸித்தார்த்த-யவ-தூர்வாபிர்-கந்த-புஷ்பாக்ஷதைர்-யுதம்
தில-புஷ்ப-ஸமாயுக்தம் க்ருஹாணார்க்யம் கஜாநந
ஸித்தி விநாயகாய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
கற்பூராகரு புஷ்பைச்ச வாஸிதம் நிர்மலம் ஜலம்
பக்த்யா தத்தம் மயா தேவ குருஷ்வாசமநம் ப்ரபோ
ஸித்தி விநாயகாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
மத்த்வாஜ்ய-சர்க்கராயுக்தம் ததிக்ஷீர-ஸமந்விதம்
பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பக்தாநாமினாமிஷ்டதாயக
கங்காதி-புண்ய-பாநீயைர் கந்த புஷ்பாக்ஷதைர் யுதை:
ஸ்நானம் குருஷ்வபகவந் உமாபுத்ர நமோஸ்து தே
ஸித்தி விநாயகாய நம: ஸ்நான தீர்த்தம் ஸமர்ப்பயாமி
ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ரக்தவஸ்த்ர த்வயம் தேவ ராஜராஜாதி பூஜித
பக்த்யா தத்தம் க்ருஹாணேதம் பகவந் ஹரநந்தன
ஸித்தி விநாயகாய நம: வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
ராஜதம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச காஞ்சநஞ் சோத்தரீயகம்
க்ருஹாண சாரு ஸர்வஜ்ஞ பக்தாநாமிஷ்டதாயக
ஸித்தி விநாயகாய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி
சந்தநாகரு கற்பூர கஸ்தூரீ குங்குமான்விதம்
விலேபநம் ஸுரச்ரேஷ்ட்ட ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸித்திவிநாயகாய நம: கந்தம் ஸமர்ப்பயாமி
அக்ஷதான் தவளான் திவ்யான் சாலீயாநக்ஷதான் கபான்
ஹரித்ராசூர்ண ஸம்யுக்தான் ஸங்க்ருஹாண கணாதிப
ஸித்தி விநாயகாய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸுகந்தீனி ச புஷ்பாணி ஜாஜீ குந்த முகாநி ச
ஏகவிம்சதி ஸங்க்யானி க்ருஹாண கணநாயக
ஸித்தி விநாயகாய நம: புஷ்பை: பூஜயாமி
கீழ்கண்ட மந்திரத்தை பத்து தரம் ஜபித்து ப்ரோக்ஷணம் செய்யவும்.
தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத்
அங்க பூஜை
ஓம் ஸ்ரீ பார்வதி நந்தநாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ கணேசாய நம: குல்பௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஏகதந்தாய நம: ஜங்கே பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஜகத்வல்லபாயை நம: ஜானூனி பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்னராஜாய நம: ஊரூ பூஜயாமி
ஓம் ஸ்ரீ அகுவாஹனாய நம: கடிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ குஹாக்ரஜாய நம: குஹ்யம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ மஹத்தமாய நம: மேட்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஹேரம்பாய நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ லம்போதராய நம: உதரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்தூலகண்டாய நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ பாசஹஸ்தாய நம: பார்ச்வே பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்கந்த ராஜாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஹரஸுதாய நம: ஹஸ்தான் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ப்ரஹ்மசாரிணே நம: பாஹூன் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸுமுகாய நம: முகம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஏகதந்தாய நம: தந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்னஹன்த்தரே நம: நேத்ரே பூஜயாமி
ஓம் ஸ்ரீ சூர்ப்பகர்ணாய நம: கர்ணௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ பாலச்சந்த்ராய நம: பாலம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ நாகாபரணாய நம: நாஸிகாம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ சிரந்தனாய நம: சுபுகம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ கஜவக்த்ராய நம: வக்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்தூலோஷ்டாய நம: ஒஷ்டௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ களந்மதாய நம: கண்டௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ சிவப்ரியாய நம: சிர: பூஜயாமி
ஓம் ஸர்வ மங்கள சுதாய நம: சர்வாங்காணி பூஜயாமி
ஏகவிம்சதி பத்ர பூஜை
ஓம் உமாபுத்ராய நம: மாசீ பத்ரம் ஸமர்ப்பயாமி (மாசிப்பச்சை)
ஓம் ஹேரம்பாய நம: ப்ருஹதீ பத்ரம் ஸமர்ப்பயாமி (கண்டங்கத்திரி)
ஓம் லம்போதராய நம: பில்வ பத்ரம் ஸமர்ப்பயாமி (வில்வம்)
ஓம் த்விரதாநநாய நம: தூர்வாம் பத்ரம் ஸமர்ப்பயாமி (அருகம்புல்)
ஓம் தூமகேதவே நம: துர்த்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை)
ஓம் ப்ருஹதே நம: பத்ரீ பத்ரம் ஸமர்ப்பயாமி (இலந்தை)
ஓம் அபவர்கதாய நம: அபாமார்க் பத்ரம் ஸமர்ப்பயாமி (நாயுருவி)
ஓம் த்வைமாதுராய நம: துளஸீ பத்ரம் ஸமர்ப்பயாமி (துளசி)
ஓம் சிரந்தநாய நம: சூத பத்ரம் ஸமர்ப்பயாமி (மாவிலை)
ஓம் கபிலாய நம: கரவீர பத்ரம் ஸமர்ப்பயாமி (அரளி)
ஓம் விஷ்ணுஸ்துதாய நம: விஷ்ணுக்ராந்த பத்ரம் ஸமர்ப்பயாமி (விஷ்ணுக்ராந்தி)
ஓம் அமலாய நம: ஆமலகீ பத்ரம் ஸமர்ப்பயாமி (நெல்லி)
ஓம் மஹதே நம: மருவக பத்ரம் ஸமர்ப்பயாமி (மருக்கொழுந்து)
ஓம் ஸிந்தூராய நம: ஸிந்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (நொச்சி)
ஓம் கஜாநநாய நம: ஜாதீ பத்ரம் ஸமர்ப்பயாமி (ஜாதி மல்லி)
ஓம் கண்ட களந்மதாய நம: கண்டலீ பத்ரம் ஸமர்ப்பயாமி (வெள்ளெருக்கு)
ஓம் சங்கரீப்ரியாய நம: சமீ பத்ரம் ஸமர்ப்பயாமி (வன்னி)
ஓம் ப்ருங்கராஜத்கடாய ப்ருங்கராஜ பத்ரம் ஸமர்ப்பயாமி (கரிசிலாங்கண்ணி)
ஓம் அர்ஜுன தந்தாய நம: அர்ஜுன பத்ரம் ஸமர்ப்பயாமி (வெண்மருதை)
ஏகவிம்சதி புஷ்ப பூஜை
ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நம: புந்நாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (புன்னை)
ஓம் அர்க்கப்ரபாய கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கு)
ஓம் ஏகதந்தாய கணபதயே நம: தாடிமீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளை)
ஓம் மஹா கணபதயே கணபதயே நம: மந்தார புஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை)
ஓம் விஷ்வக்ஸேநகணபதயே கணபதயே நம: வகுள புஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம்)
ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருணாளம் புஷ்பம் ஸமர்ப்பயாமி (வெட்டிவேர்)
ஓம் ப்ரமத கணபதயே கணபதயே நம: பாடலீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி)
ஓம் ருத்ர கணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பை)
ஓம் வித்யா கணபதயே நம: தர்த்தூர புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை)
ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் ஸமர்ப்பயாமி (சண்பகம்)
ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ)
ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)
ஓம் ஸம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை)
ஓம் விஷ்ணு கணபதயே நம: சம்யாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றை)
ஓம் ஈச கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கு)
ஓம் கஜாஸ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் ஸமர்ப்பயாமி (செங்கழுநீர்)
ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம: ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்தி)
ஓம் வீர கணபதயே நம: பில்வ புஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்)
ஓம் கந்தர்ப்ப கணபதயே நம: கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளி)
ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை)
ஓம் ப்ரஹ்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லி)
ஓம் ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லி)
ஏகவிம்சதி தூர்வாயுக்ம பூஜை
தூர்வா என்றால் அருகம்புல். யுக்மம் என்றால் இரட்டை, ஆகவே இரண்டிரண்டு அருகம்புல்லாக கொண்டு பூஜிக்க வேண்டும்.
ஓம் கணாதிபாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் பாசாங்குசதராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஆகுவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் விநாயகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஈசபுத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஏகதந்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் இபவக்த்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் மூஷிகவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் குமாரகுரவே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கபிலவர்ணாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ப்ரஹ்மசாரிணே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் மோதகஹஸ்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுரச்ஷ்ரேஷ்ட்டாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கஜநாஸிகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கபித்தபலப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கஜமுகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுப்ரஸந்நாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுராக்ரஜாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் உமாபுத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸ்கந்தப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர சத நாமாவளி
ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கௌரீபுத்ராய நம:
ஓம் கணேச்வராய நம:
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் பூதாய நம:
ஓம் தக்ஷாய நம:
ஓம் அத்யக்ஷாய நம:
ஓம் த்விஜப்ரியாய நம: 10
ஓம் அக்நிகர்பச்சிதே நம:
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம:
ஓம் வாணீப்ரதாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் சர்வதநயாய நம:
ஓம் சர்வரீப்ரீயாய நம:
ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
ஓம் தேவாய நம: 20
ஓம் அநேகார்ச்சிதாய நம:
ஓம் சிவாய நம:
ஓம் சுத்தாய நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் ப்ரம்மசாரிணே நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் த்வைமாத்ரேயாய நம:
ஓம் முனிஸ்துதாய நம:
ஓம் பக்தவிக்னவிநாசநாய நம: 30
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுராய நம:
ஓம் சக்திஸம்யுதாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம:
ஓம் காலாய நம:
ஓம் க்ரஹபதயே நம: 40
ஓம் காமினே நம:
ஓம் ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
ஓம் பாசாங்குசதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் குணாதீதாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் அகல்மஷாய நம:
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
ஓம் ஸித்தார்ச்சித பதாம்புஜாய நம:
ஓம் பீஜபூரபலாஸக்தாய நம: 50
ஓம் வரதாய நம:
ஓம் சாச்வதாய நம:
ஓம் க்ருதினே நம:
ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் வீதபயாய நம:
ஓம் கதினே நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் இக்ஷூசாபத்ருதே நம:
ஓம் ஸ்ரீதாய நம:
ஓம் அஜாய நம:
ஓம் உத்பலகராய நம: 60
ஓம் ஸ்ரீபதயே நம:
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம:
ஓம் குலாத்ரீபேத்த்ரே நம:
ஓம் ஜடிலாய நம:
ஓம் கலிகல்மஷநாசநாய நம:
ஓம் சந்த்ரசூடாமணயே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸ்தூலதுண்டாய நம:
ஓம் அக்ரண்யே நம: 70
ஓம் தீராய நம:
ஓம் வாகீசாய நம:
ஓம் ஸித்திதாயகாய நம:
ஓம் தூர்வாபில்வப்ரியாய நம:
ஓம் அவ்யக்தமூர்த்தயே நம:
ஓம் அத்புதமூர்த்திமதே நம:
ஓம் பாபஹாரிணே நம:
ஓம் ஸமாஹிதாய நம:
ஓம் ஆச்ரிதாய நம:
ஓம் ஸ்ரீகராய நம: 80
ஓம் ஸௌம்யாய நம:
ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் கைவல்யஸுகதாய நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞானிநே நம:
ஓம் தயாயுதாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ப்ரஹ்மத்வேஷ விவர்ஜிதாய நம:
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம: 90
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் விபுதேச்வராய நம:
ஓம் ரமார்ச்சிதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் நாகராஜயஜ்ஞோபவீதவதே நம:
ஓம் ஸ்த்தூலகண்ட்டாய நம:
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம:
ஓம் ஸாமகோஷப்ரியாய நம:
ஓம் சைலேந்த்ர தநுஜோத் ஸங்க கேலநோத்ஸுக மானஸாய நம: 100
ஓம் ஸ்வலாவண்யஸுதாஸார ஜிதமன்மத விக்ரஹாய நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் மாயினே நம:
ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஹ்ருஷ்டாய நம:
ஓம் த்வஷ்டாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மநே நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம: 108
ஓம் ஸித்திவிநாயகாய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
விநாயக அஷ்டோத்திரம் ஸம்பூர்ணம்
உத்தராங்க பூஜை
தசாங்கம் குக்குலோபேதம் ஸுகந்தம் ச மனோஹரம்
தூபம் தாஸ்யாமி தேவேச க்ருஹாண த்வம் கஜாநந
ஸித்தி விநாயகாய நம: தூபமாக்ராபயாமி
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் ஈச புத்ர நமோஸ்து தே
ஸித்தி விநாயகாய நம: தீபம் தர்சயாமி
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் பண்ணிக் கொண்டு நைவேத்தியங்களை நிவேதனம் செய்யவும்)
ஓம் பூர்புவஸ்ஸுவ: பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத் - தேவஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி ஓம் ப்ராணாய ஸ்வாஹா ஓம் அபானாய ஸ்வாஹா ஓம் வ்யாநாய ஸ்வாஹா ஓம் உதானாய ஸ்வாஹா ஓம் ஸமாநாய ஸ்வாஹா ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: சால்யான்னம், க்ருதகுட பாயஸம், மாஷாபூபம், குடாபூபம், லட்டுகம், மோதகம், நாரிகேளகண்டம், கதளீஃபலம், பத்ரீஃபலம், ஜம்பூஃபலம், பீஜபூரஃபலம், ஏதத் ஸர்வம், அம்ருதம், மஹா நைவேத்யம் நிவேதயாமி – மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
ஐநவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
அம்ருதாபிதாநமஸி – உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்வீ தளைர்யுதம்
கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸித்தி விநாயகாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
நீராஜநம் நீரஜஸ்கம் கற்பூரேண க்ருதம் மயா
க்ருஹாண கருணாராசே கணேச்வர நமேஸ்துதே
ஸித்தி விநாயகாய நம: கற்பூர நீராஜநம் தர்சயாமி
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ஜாதீ சம்பக புன்னாக மல்லிகா வகுளாதிபி:
புஷ்பாஞ்ஜலிமி ப்ரதாஸ்யாமி க்ருஹாண த்விரதாநந
ஸித்தி விநாயகாய நம: மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
யோபாம் புஷ்பம் வேத, புஷ்பவான் ப்ரஜாhன் பசுமாந் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம், புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி
ஸித்தி விநாயகாய நம: மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
யானி கானி ச பாபானி ஜந்மாந்த்ர க்ருதானி ச
தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே (பிரதக்ஷிணம் செய்யவும்)
நமோ நமோ கணேசாய நமஸ்தே விச்வரூபிணே
நிர்விக்னம் குரமே கார்யம் நமாமி த்வாம் கஜாநந
அகஜாநந பத்மார்க்கம் கஜாநந மஹர்நிசம்
அநேகதந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே (நமஸ்காரம் செய்யவும்)
விநாயக வரம் தேஹி மஹாத்மன் மோதகப்ரிய
அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா (வரம் வேண்டுதல்)
சத்ரம் ஸமர்ப்பயாமி (குடை அளித்தல்)
சாமரம் ஸமர்ப்பயாமி (சாமரத்தால் வீசுதல்)
வ்யஜநம் ஸமர்ப்பயாமி (விசிறியால் வீசுதல்)
கீதம் ஸ்வராவயாமி (பாட்டுப் பாடுதல்)
ந்ருத்யம் தர்சயாமி (நடனம் புரிதல்)
வாத்யம் கோஷயாமி (வாத்யம் வாசித்தல்)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி (ஊஞ்சலில் ஆட்டுதல்)
ஸமஸ்த ராஜோபசாராந் ஸமர்ப்பயாமி
அர்க்யம்
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் சுபதிதௌ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ஸித்தி விநாயக பூஜாபல ஸம்பூர்ணதா ஸித்யர்த்தம் க்ஷீரார்க்ய ப்ரதானம் உபாயன தானஞ்ச கரிஷ்யே
பாலில் ஜலம் கலந்து கொண்டு கீழ்கண்டபடி அர்க்யம் விடவும்.
(1) கௌர்யங்கமல ஸம்பூத ஜ்யேஷ்டஸ்வாமிந் கணேச்வர க்ருஹாணார்க்யம் மயா தத்தம் கஜவக்த்ர நமோஸ்துதே, ஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம் (3 தடவை நீர் விடவும்)
(2) அர்க்யம் க்ருஹாண ஹேரம்ப ஸர்வ ஸித்தி ப்ரதாயக: விநாயக மயா தத்தம் புஷ்பாக்ஷத ஸமந்விதம் ஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம் (3 தடவை நீர் விடவும்)
(3) விநாயக நமஸ்தேஸ்து கந்த புஷ்பாக்ஷதைர் யுதம் க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ஸர்வாபீஷ்ட ப்ரதோ பவ ஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம் (3 தடவை நீர் விடவும்)
ஆனேன அர்க்ய ப்ரதானேன பகவான் ஸர்வாத்மக: தத் ஸர்வம் ஸித்தி விநாயக: ப்ரீயதாம்
தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து
க்ஷமா பிரார்த்தனை
புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு:
காயேன வாசா மனஸேந்திரியைர்வா
புத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமியத் யத்ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமன் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி
மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீநம் ஸீரேச்வர
யத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் தத் அஸ்துதே
த்வமேவ மாதாச த்வமேவ த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ
ஆவாஹனம் ந ஜானாமி நஜானாமி விஸர்ஜனம்
பூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் ஸ்ரீ ஸுதர்சனம்
அனையா பூஜயா ஸ்ரீ ஸித்தி விநாயக: ப்ரீயதாம்
ஓம் தத் சத் ஸ்ரீ ப்ரம்மார்ப்பணமஸ்து
உபாயன தானம்
மஹாகணபதி ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாசனம், அமீதே கந்தா: ஸகலாராதன: ஸ்வர்ச்சிதம்.
(தாம்பூலம் தக்ஷிணை, வாயனம், ஆகியவற்றை கீழ்க்கண்ட சுலோகத்தை சொல்லித் தரவேண்டும்.)
கணேச: ப்ரதிக்ருஹ்ணாதி கணேசோ வை ததாதி ச
கணேசஸ் தாரகோ த்வாப்யாம் கணேசாய நமோ நம:
இதம் உபாயனம் ஸதக்ஷிணகம் ஸதாம்பூலம்
மஹாகணபதி ஸ்வரூபாய ப்ரம்மணாய
துப்யம் அஹம் ஸம்ப்ரததே நமம.
நமஸ்காரம் செய்யவும்.
புனர் பூஜை
மண் பிள்ளையாரை கிணற்றிலோ ஆற்றிலோ கடலிலோ சேர்க்கும் வரை, முக்காலமும்
ஓம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதி ஆன:
ஸ்ருண்வன் ஊதிபி: ஸீதஸாதனம்.
ஓம் பூர் புவஸ்ஸுவரோம்.
அஸ்மாத் பிம்பாத் ஸுமுகம் ஸ்ரீ மஹாகணபதிம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.
(என்று சொல்லி தீப தூப ஆராதனை காட்டி, ஆரத்தி எடுத்து விநாயகரை நீர்நிலையில் சேர்த்து விடவேண்டும்).
ஞாயிறு, 12 ஜூன், 2011
கெளதம புத்தர் - வரலாற்று நாயகர்
இந்த உலகம் உய்ய வேண்டுமானால் அதில் அன்பு செழிக்க வேண்டும். உலகுக்கு அன்பைப் போதித்த பல மகான்களின் பெயர்களை வரலாறு அன்போடும் மரியாதையோடும் இன்றும் சுமந்து நிற்கிறது. அந்த மகான்களில் ஒருவரை சந்திப்போம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சிந்திப்போம்.
- முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
- இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.
- மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
- நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.
புத்தர் தனது முதல் போதனையை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் என்ற பகுதியில் நிகழ்த்தினார். அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வட ஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது.
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
உள்ளத்தோடு உள்ளம்
எல்லாவித சௌகரியங்களும், மிகுந்த பணபலமும் இருந்தும் தான் சந்தோஷமாக இல்லை” என்று ஒரு பெண்மணி குருவிடம் சென்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
குரு சொன்னார், “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மகிழ்ச்சிக்கு அடிப்படை பணமும் சௌகரியங்களும் தான் என்பது போல் இருக்கிறது. அப்படி இல்லை. வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல காரியத்தின் மீதாவது உங்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் சந்தோஷத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு உண்மை.
பணம் சேர்க்க கண்டுபிடித்த வழிகளில்தான் இன்று நிம்மதியைத் தொலைத்திருக்கிறோம், உடன் நோய்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.
எத்தனை இருந்தும் இத்தனூண்டு சந்தோசம் இல்லை என்றால் அத்தனையால் என்ன பயன்? சிந்தித்து உதவவும், நல்ல செயல்களின் மீது நம் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கொணர்ந்து, இயந்திர வாழ்க்கையைத் தவிர்த்து, மனிதவாழ்க்கையை உணர்ந்து வாழ்வோம் இனி நலமாக! வளமாக!!
சனி, 26 பிப்ரவரி, 2011
என்றும் வளம் பெற
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.
- கவியரசு கண்ணதாசன்.
சனி, 19 செப்டம்பர், 2009
குரு வணக்கம்
ஈஸ்வரப்பட்டா குருநாதா!
சச்சிதானந்த பிரபுவே குருநாதா !
குருநாதா!குருநாதா!
சகலமும் நீயே குருநாதா!
அம்மையப்பனே குருநாதா!
அறிவொளி தருவாய் குருநாதா!
என்றும் நீயே குருநாதா!
ஏற்றம் தருவாய் குருநாதா!
இன்னருள் தருவாய் குருநாதா!
ஓங்கி நிற்பாய் குருநாதா!
ஓம்காரப்பனே குருநாதா!
உன்னை வழிபடவே குருநாதா!
ஊக்கம் தருவாய் குருநாதா!
ஒளியின் ஒலியாய் குருநாதா!
ஐக்கியமாகிடுவாய் குருநாதா!
குருநாதா!குருநாதா!
சற்குருநாதா குருநாதா!
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
திருமண வாழ்த்து
இருமனங்கள் இனிய உறவுகளை
இல்லறத்தில் பெற்று
இறையருளசியுடன்
இன்புற்றிருக்க இருமனங்களை
திருமனதாக்கி வணங்கி
வாழ்த்துகிறோம்!
சனி, 5 செப்டம்பர், 2009
புதன், 2 செப்டம்பர், 2009
சற்குரு ஸ்ரீ ஈஸ்வரப்பட்டா சுவாமிகள்
மகானின் மௌனம் மகத்துவம் புரிகிறது
மகத்துவம் மனிதனை புனிதம் ஆக்குகிறது
புனிதம் புத்தொளி ஈட்டுகிறது
ஈட்டியவோளி ஈசன்பால் ஈர்க்கப்படுகிறது.
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
சற்குரு வணக்கம்
தன்னுள்ளே தன்னை தரிசித்த தவத்திருவடிகளே!
தன்னையே தவறாமல் தருவித்து தலைவணங்கி
தழைத்தோங்க தந்தருள்வாய் தன்திருஆசிதனை!