ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

உள்ளத்தோடு உள்ளம்

உள்ளத்தோடு உள்ளம்: "

எல்லாவித சௌகரியங்களும், மிகுந்த பணபலமும் இருந்தும் தான் சந்தோஷமாக இல்லை” என்று ஒரு பெண்மணி குருவிடம் சென்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

குரு சொன்னார், “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மகிழ்ச்சிக்கு அடிப்படை பணமும் சௌகரியங்களும் தான் என்பது போல் இருக்கிறது. அப்படி இல்லை. வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல காரியத்தின் மீதாவது உங்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் சந்தோஷத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு உண்மை.

பணம் சேர்க்க கண்டுபிடித்த வழிகளில்தான் இன்று நிம்மதியைத் தொலைத்திருக்கிறோம், உடன் நோய்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.

எத்தனை இருந்தும் இத்தனூண்டு சந்தோசம் இல்லை என்றால் அத்தனையால் என்ன பயன்? சிந்தித்து உதவவும், நல்ல செயல்களின் மீது நம் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கொணர்ந்து, இயந்திர வாழ்க்கையைத் தவிர்த்து, மனிதவாழ்க்கையை உணர்ந்து வாழ்வோம் இனி நலமாக! வளமாக!!

"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக