சனி, 19 செப்டம்பர், 2009

குரு வணக்கம்

குருநாதா!குருநாதா!
ஈஸ்வரப்பட்டா குருநாதா!
சச்சிதானந்த பிரபுவே குருநாதா !
குருநாதா!குருநாதா!
சகலமும் நீயே குருநாதா!
அம்மையப்பனே குருநாதா!
அறிவொளி தருவாய் குருநாதா!
என்றும் நீயே குருநாதா!
ஏற்றம் தருவாய் குருநாதா!
இன்னருள் தருவாய் குருநாதா!
ஓங்கி நிற்பாய் குருநாதா!
ஓம்காரப்பனே குருநாதா!
உன்னை வழிபடவே குருநாதா!
ஊக்கம் தருவாய் குருநாதா!
ஒளியின் ஒலியாய் குருநாதா!
ஐக்கியமாகிடுவாய் குருநாதா!
குருநாதா!குருநாதா!
சற்குருநாதா குருநாதா!

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

திருமண வாழ்த்து

இவ்வாழ்வில் இணையும்
இருமனங்கள் இனிய உறவுகளை
இல்லறத்தில் பெற்று
இறையருளசியுடன்
இன்புற்றிருக்க இருமனங்களை
திருமனதாக்கி வணங்கி
வாழ்த்துகிறோம்!

சனி, 5 செப்டம்பர், 2009

உன்னத உறவுகள்


உலகின் உறவை
உளமார உணர்ந்து உறவாடினால்
உயர்வாகும் உறவுகள் உலகினில் .......

புதன், 2 செப்டம்பர், 2009

சற்குரு ஸ்ரீ ஈஸ்வரப்பட்டா சுவாமிகள்
நலம் நலமாக நலம் நாடுவோம்.

சற்குரு ஸ்ரீ ஈஸ்வரப்பட்டா சுவாமிகள்

மௌனம் மனிதனை மகான் ஆக்குகிறது
மகானின் மௌனம் மகத்துவம் புரிகிறது
மகத்துவம் மனிதனை புனிதம் ஆக்குகிறது
புனிதம் புத்தொளி ஈட்டுகிறது
ஈட்டியவோளி ஈசன்பால் ஈர்க்கப்படுகிறது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

இனிமை பெறுபவை இறைபணியே
பிறர் பொருள் நாடா நாடுங்கள்
பொருள் படும் வாழ்க்கையை
கணிந்தவரை போற்றுவோம்,
கனியா வாழ்வில் கணிந்திடுவோம்
நால்வர் போற்றிட
நலம் வளம் பெருகுக!

சற்குரு வணக்கம்

தனியாய் தவமிருந்து தவயோகியாய் தன்னுணர்ந்து
தன்னுள்ளே தன்னை தரிசித்த தவத்திருவடிகளே!
தன்னையே தவறாமல் தருவித்து தலைவணங்கி
தழைத்தோங்க தந்தருள்வாய் தன்திருஆசிதனை!