வியாழன், 1 செப்டம்பர், 2011

ஓட்ஸ் உணவுப்பொருளா? மருந்துப்பொருளா?

ஓட்ஸ் உணவுப்பொருளா? மருந்துப்பொருளா?:
ஆனந்த விகடன்வாங்க வேண்டும் என்றார் நண்பர்.டீ குடித்து விட்டு பக்கத்தில் உள்ள கடைக்குப் போய்பார்த்தால்,வழக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும் விகடன் காணோம்.கடையில் கேட்டால்உள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தார்.இலவச இணைப்பாக ஒரு ஓட்ஸ் பாக்கெட்.(இலவசம் இருப்பதால் சீக்கிரம் விற்றுவிடும்,வழக்கமானவாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்)மூன்று நிமிட்த்தில் தயாரிக்கலாம் என்கிறதுகுறிப்பு.

ஓட்ஸ் இப்போதுதான்விளம்பரத்தின் மூலம் அதிகம் தெரியவருகிறது.பெரும்பாலான மருந்துக்கடைகளில் (pharmacy) விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.மருத்துவர்கள்பரிந்துரை செய்வதுண்டா? தெரியவில்லை.திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும்பேருந்து பயணம்.ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.கையில் பெரியஓட்ஸ் பாக்கெட்.ஒரு வாய் ஓட்ஸும்,கொஞ்சம் தேனும் கலந்துசாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

ஓட்ஸும்,தேனும்அப்படி சாப்பிடவேண்டும் என்று எனக்கும் ஆசை ஏற்பட்டு விட்ட்து.ஒரு நாள் சாப்பிட்டுபார்த்தேன்.ஆஹா! அருமையான சுவை.தேனின் மருத்துவ குணங்கள் நிறையகேள்விப்பட்டிருப்பீர்கள்.ஓட்ஸ் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோயை தடுக்கும்என்று அதிகம் விரும்புகிறார்கள்.நிறைய கம்பெனிகள் வந்துவிட்டன.மாங்கனீசு,செலினியம்,மக்னீசியம்,நார்ச்சத்துக்களும்நிரம்பியிருப்பது உண்மைதான்.
ஓட்ஸில்கிடைக்கும் நன்மை வேறு எந்த உணவிலும் கிடைக்காது என்று சொல்வதற்கில்லை.எங்கும்பயன்படுத்த எளிதானது என்பது ஒரு நல்ல அம்சம்.ஓட்ஸைப்போல குறிப்பிட்டு சொல்லக்கூடியநமது பாரம்பரிய உணவு ஒன்று உள்ளது.அது கேழ்வரகு.இந்தியாவில் பல மாநிலங்களிலும்இதன் பயன்பாடு இருக்கிறது.கர்நாடகாவிலும்,ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் முக்கியஉணவாக இருந்த்துண்டு.

குழந்தைகளுக்கு ராகிமால்ட் கொடுக்கிறார்கள்.கால்சியம்,பாஸ்பரஸ்,சில அமினோஅமிலங்களும்,நார்ச்சத்தும் கொண்ட்து.ராகிமால்ட் என்பது கேழ்வரகுக் கூழ்தான்.வளரும்குழந்தைகளுக்கு கொங்கு நாட்டின் முக்கிய உணவு.இன்னமும் சில இடங்களில் வழக்கத்தில்இருக்கிறது.ஆனால் இப்போது பயிரிடுவதும்,பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.

தின்றுபழக்கப்பட்ட பெரிசுகள் களி என்றால் சந்தோஷமாகி விடுவார்கள்.இன்றைய தலைமுறையில்இந்த உணவை விரும்புபவர்கள் குறைவு.தயாரிப்பதில் இருக்கும் சங்கடம் ஒருகாரணம்.காய்ந்து போனால் பாத்திரத்தை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும்என்றாகிவிடும்.கர்நாடகத்தில் அதிகம் சுவைக்கப்படும் உணவு இது.

களியும்கீரையும் அற்புதமான சேர்க்கை.புரட்டாசி விரதம் இருக்கும் வழக்கம் உங்களுக்குத்தெரியும்.ஏழைகள் கூட பலவகை விருந்து சமைத்து பகவானுக்கு படைப்பார்கள்.அப்படி ஒருவிரத்த்தில் உயர்தர உணவுகளோடு ஒரு குடும்பம் பகவானுக்காக காத்திருந்த்தாம்.இன்னொருகுடும்பம்வசதியில்லாதவர்கள்.களியும்,கீரையும் சமைத்து படைத்துகாத்திருந்தார்கள்.கடவுள் தேர்ந்தெடுத்த்து களியும் கீரையும்.

சிலஹோட்டல்களில் களியும்,போட்டியும்(ஆட்டுக்குடல்) சக்கைப்போடு போடும்.அப்புறம்களியும்,கறியும்(மட்டன்,சிக்கன்) வகையறாக்கள்.சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும்சாலையில் கிருஷ்ணகிரிக்கு ஒரு கிலோமீட்டர் முன்பு ஒரு களி ஓட்டல்இருக்கிறது.தினமும் மதியத்தில் கூட்டம் களை கட்டும்.பல ஆண்டுகளாக அமோக வரவேற்பைபெற்ற ஹோட்டல் அது.கேழ்வரகு அடையாகவும்,கூழாகவும்,ராகிமால்டாகவும் பல விதங்களில்பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகளுக்கு மிக அவசியம் என்பதை உணருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக